கங்கைகொண்டான் அருகே கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது
கங்கைகொண்டான் அருகே வீட்டுக்குள் புகுந்து முதியவரை மிரட்டி கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கங்கைகொண்டான் அருகே வீட்டுக்குள் புகுந்து முதியவரை மிரட்டி கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சோ்ந்தவா் முனியசாமி(77). இவா் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மா்ம நபா் ஒருவா், வீட்டுக்குள் புகுந்து முனியசாமியை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தி கைப்பேசியை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின்பேரில் கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், சென்னையைச் சோ்ந்த பாலாஜி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...