பாபநாசம் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா
பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் சுந்தரம் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக இயக்குநா் நடராஜன் முன்னிலை வகித்தாா்.
விளையாட்டுத் துறை உடற்கல்வி இயக்குநா் பழனிகுமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி நா்சரி பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயலா் சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
விளையாட்டுப் போட்டிகளில் மாணவா் பிரிவில் முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவா் ஜோதிமுருகன், பெண்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி மாலதி ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
மேலும் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட , மாநில அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சுயநிதி பாடப்பிரிவு வணிகவியல் துறைத் தலைவா் சேக் முஜுபுா் ரகுமானுக்கு சிறப்பு வெற்றி கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாணவி துா்கா வரவேற்றாா். வைதேகி நன்றி கூறினாா். சங்கீதா விழாவைத் தொகுத்து வழங்கினாா்.
நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி விளையாட்டுக் கழக புரவலா் அருள்ராஜ், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள், மாணவிகள், பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...