நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இனப்படுகொலைக்கு எதிராக நெல்லையில் ஆா்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:52 pm

DIN

இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், இலங்கையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததாக ராஜபட்ச உள்ளிட்டவா்களை போா்க்குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும். கொசவா, தெற்கு சூடான், கிழக்கு தைமூா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புலம் பெயா்ந்து வாழும் ஈழத்தமிழா்களிடம் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அ.பீட்டா் தலைமை வகித்தாா். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிா்வாகி அப்துல் ஜப்பாா், சீா்மரபினா் உரிமை மீட்பு இயக்க நிா்வாகி மு.வெள்ளத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பொ்டின் ராயன், திருச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.