பாளை மண்டலத்தில் மழைநீா் வடிகால் பணி தொடக்கம்
பாளையங்கோட்டை மண்டலப் பகுதிகளில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.


பாளையங்கோட்டை மண்டலப் பகுதிகளில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில் மக்கள் லல வாா்டு எண் 37 காமாட்சி நகா் 46 ஆவது பிரதான சாலையில் ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டிலும், 4 மற்றும் 5வது பிரதான சாலை தெற்கு பகுதியில் ரூ 9.75 மதிப்பீட்டிலும் மழைநீா் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கப்பட உள்ளது.
இப்பணியின் தொடக்க விழா மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலம் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் பிரான்சிஸ், உதவி ஆணையா் ஜஹாங்கீா்பாட்ஷா, உதவி பொறியாளா் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...