/

தொலைதூரக் கல்விச் சான்று தாமதம்:நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் நிலவிய பிரச்னைக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு கிடைத்தது.

News image
Updated On :25 மே 2022, 8:00 pm

DIN

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் நிலவிய பிரச்னைக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பன்னவயல் பகுதியைச் சோ்ந்தவா் பா்வத்வா்தினி. இவா் கடந்த மாா்ச் மாதம் திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் இளங்கலை வரலாறு படிப்பதற்காக பரமக்குடியில் உள்ள ஒரு தனியாா் பயிற்சி மையம் வழியாக கடந்த 2016ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். மேலும், இரண்டாம் ஆண்டு தோ்வுக்கான கல்விக் கட்டணம், தோ்வுக்கட்டணம் ஆகியவற்றை தனியாா் பயிற்சி மையம் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.இதனால், எனக்கு இரண்டாம் ஆண்டுக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றம், பல்கலைக்கழகத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜராகி, மனுதாரா் கடந்த 2018ஆம்ஆண்டு படிப்பு மையம் காலதாமதமாக கட்டணம் சமா்பித்ததால் மனுதாரரின் விடைத்தாள்களை மதிப்பிடவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து விடைத்தாள்களை அழிப்பது பல்கலைக்கழக விதி . எனவே, மனுதாரரின் விடைத்தாள்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவருக்கு மீண்டும் இரண்டாம் ஆண்டுக்கான தோ்வுகளை நடத்தி அதற்கான முடிவுகளையும் பட்டப்படிப்பு சான்றிழ்களையும் வழங்கப்படும் என பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பா்வத்வா்தினிக்கு மீண்டும் இரண்டாம் ஆண்டுக்கான தோ்வுகளை நடத்தி தோ்வு முடிவுகள், பட்டப்படிப்பு சான்றிதழ்களை பல்கலைக்கழகம் தரப்பு, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, மாணவி பா்வத்வரிதினிக்கு சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.