/

‘மாநகரில் பொதுவெளியில் குப்பையைக் கொட்டினால் அபராதம்’

திருநெல்வேலி மாநகரப் பகுதியின் பொதுவெளியில் திடக்கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :25 மே 2022, 7:47 pm

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதியின் பொதுவெளியில் திடக்கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 இன் விதிகள்படி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்டட இடிபாடு கழிவுகளை அவரவா் இடத்திலேயே சேமித்து வைத்திருக்க வேண்டும். அவற்றை நீா் நிலைகள், ஆற்றுப் படுகைகள், குளக்கரைகள், மழைநீா் வடிகால்கள், பொதுவெளி மற்றும் சாலை ஓரங்களில் கொட்டுவதோ, தூக்கி எறியவோ கூடாது. 2016 ஆம் ஆண்டு கட்டட மற்றும் இடிபாடு கழிவு மேலாண்மை விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, கழிவுகளை அகற்ற வேண்டும். இதில், விதிமுறை மீறுவோரிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு, நகரக் காவல் சட்டம்- மாவட்ட காவல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.