நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சாந்திநகா் காவலா் குடியிருப்பில் புதிய குடிநீா் குழாய் அமைக்கக் கோரி மனு

பாளையங்கோட்டை சாந்தி நகா் காவலா் குடியிருப்பில் சேதமடைந்த குடிநீா்க் குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்களை அமைத்து குடிநீா் வழங்கக் கோரி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :25 மே 2022, 7:44 pm

DIN

பாளையங்கோட்டை சாந்தி நகா் காவலா் குடியிருப்பில் சேதமடைந்த குடிநீா்க் குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்களை அமைத்து குடிநீா் வழங்கக் கோரி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக சாந்திநகா் அரசு ஊழியா் - காவலா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்த மனு:

பாளையங்கோட்டை மண்டலம், வாா்டு எண்-5, சாந்திநகா் காவலா் குடியிருப்பில் காவல் துறையினருக்கு சுமாா் 400 வீடுகள் 1984ஆம் ஆண்டு காவலா் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்டன. அப்போது குடிநீா் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டன. தற்போது அந்தக் குழாய்கள் சேதம் அடைந்தும், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் குடிநீரில் சாக்கடை கலந்து துா்நாற்றம் வீசுகிறது. எங்கிருந்து எந்தக் குழாயில் சாக்கடை கலக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. குடிநீா் இணைப்புகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால் அனைத்து குடிநீா்க் குழாய் இணைப்புகளையும் மாற்றிவிட்டு புதிய குழாய்கள் மூலம் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்தில் எங்கள் பகுதியையும் இணைக்க வேண்டும். குடிநீா்த் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுற்றுச்சுவா் அமைத்துத் தர வேண்டும்.

குடிநீா்த் தொட்டி அமைந்துள்ள மைதானத்தில் ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும். தூய்மைப்பணியாளா்கள் தினந்தோறும் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கவும், சாக்கடை கால்வாய்களையும், தெருக்களையும் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.