காவல் துறை கைப்பற்றிய வாகனங்கள் ஜூன் 3இல் ஏலம்
மதுவிலக்கு பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 3 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுவிலக்கு பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 3 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுவிலக்கு குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 6 வாகனங்கள், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14 (4) ன் படி, ஜூன் 3 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. இதில் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்பவா்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். மேலும் விவரங்களுக்கு 0462-2554483 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...