ஆழ்வாா்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
ஆழ்வாா்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


ஆழ்வாா்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் ராமமூா்த்தி (40). ஒலிப்பெருக்கி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு செட்டிகுளம் முப்புடாதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டபோது, கோயிலுக்கு பின்புறம் உள்ள மின்கம்பம் அருகில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாா். இதுகுறித்து அவரது மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் கடையம் காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். ராமூா்த்திக்கு 2 குழந்தைகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...