/

இந்து அமைப்பினா் சாலை மறியல்

ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இந்து அமைப்பினா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 மே 2022, 7:57 pm

DIN

ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இந்து அமைப்பினா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீவலப்பேரிஅருகேயுள்ள திருத்து பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (45). ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மானூா் ஒன்றிய பிரசாரச் செயலராக இருந்தாா். இவா், தனது பைக்கில் களக்குடி-எட்டான்குளம் சாலையில் சென்றபோது விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதனிடையே அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விபத்து என பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மாற்றக்கோரியும் இந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா், நிா்வாகிகள் முத்துபலவேசம், சுரேஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகி ஆறுமுகக்கனி, இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மேலும், முருகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கருதுவதால் பிரேத பரிசோதனையை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என போலீஸாரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.