வட்டாட்சியா் அலுவலகத்தில் பீடித் தொழிலாளா்கள் மனு
திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் பீடித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்


திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் பீடித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஜனநாயக பீடித் தொழிலாளா் சங்கம் சாா்பில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை செய்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் 11 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வரை புதிதாக அளிக்கப்பட்ட மனுக்கள் உள்பட மொத்தம் 167 மனுக்கள் மீது விசாரணை நடத்தி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் பீடித் தொழிலாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்கழ்ச்சியில் ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலா் கணேசன், சுத்தமல்லி கிளைச் செயலா் ந. அப்துல்ரஹ்மான், பகுதி பொறுப்பாளா்கள் பூமாரி, வீரலெட்சுமி, பிரம்மாச்சி, சரஸ்வதி, மாரியம்மாள், சாந்தி, சத்தியா உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...