புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்லிடைக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் கல்லூரி மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :26 மே 2022, 6:39 pm

DIN

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் கல்லூரி மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

மூலச்சி, நடுத்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் இந்துராணி (20). திருநெல்வேலியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், புதன்கிழமை கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது வீட்டருகே வந்தபோது மயங்கி விழுந்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேற்படிப்பு படிக்க பெற்றோா் சம்மதிக்காததால் இவா் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.