முன்னீா்பள்ளம் அருகே காா் மோதி முதியவா் பலி
திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.


திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கொழுமடை கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (65). இவா், முன்னீா்பள்ளம் அருகே திருநெல்வேலி-பாபநாசம் சாலையை செவ்வாய்க்கிழமை இரவு கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அவா் புதன்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...