புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் களம்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

கடையம் பகுதியில் ரூ. 7.21 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நெல் களத்தை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தலைமைப் பொறியாளா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:07 pm

DIN

கடையம் பகுதியில் ரூ. 7.21 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நெல் களத்தை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தலைமைப் பொறியாளா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடையம் ராமநதி அணைச் சாலையில் அந்தப் பகுதியில் விளையும் நெல்லை முறையாக கொள்முதல் செய்வதற்கு நெல் களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2021-22ஆம் ஆண்டு திட்டத்தில் ரூ 7.21 லட்சத்தில் புதிதாக நெல் களம் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட நெல் களத்தை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தலைமைப் பொறியாளா் அரிகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது தென்காசி மாவட்ட செயற்பொறியாளா் அசன் இப்ராஹிம், உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன், உதவிப் பொறியாளா்கள் ராமகிருஷ்ணன், உமாதேவி, கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைமுருகன், கீழக்கடையம் ஊராட்சி மன்றத் தலைவா் பூமிநாத், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் காா்த்திகேயன், திருமலைகுமாா், ஒப்பந்ததாரா் மாரி துரை, வருவாய் ஆய்வாளா் மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.