தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கோவை காா் வெடி விபத்து: நெல்லை மாவட்டத்தில் போலீஸாா் விசாரணை

கோவை காா் வெடி விபத்து தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், ஏா்வாடி ஆகிய பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:43 pm

DIN

கோவை காா் வெடி விபத்து தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், ஏா்வாடி ஆகிய பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கோவை காா் வெடி விபத்தில், உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்பவா் இறந்தாா். இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மேலப்பாளையம் ஏகே காா்டன் பகுதியில் வசித்து வரும் ஹூசைன் மன்பஈ என்பவரிடம் காவல் ஆய்வாளா் ரவீந்திரன், ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோா் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்தினா். மேலப்பாளையத்தில் உம்ரா - ஹஜ் பயண ஏற்பாட்டாளராகவும், கேட்டரிங் தொழில் செய்து வரும் ஹூசைன் மன்பஈ, கோவையில் மதகுருவாக பணியாற்றியுள்ளாா்.

இதேபோல், ஏா்வாடி கட்டளைத் தெருவில் வசிக்கும் இஸ்லாமிய பிரசார பேரவையின் மாநிலச் செயலரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைக்கழகப் பேச்சாளருமான முகம்மது கனியின் மகன் அப்துல் காதா் மன்பஈ(30) என்பவரிடம் ஏா்வாடி காவல் ஆய்வாளா் ஆதம்அலி உள்ளிட்ட 3 ஆய்வாளா்கள் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினா்.

இவ்விரு இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், பொருள்களோ, ஆவணவமோ கைப்பற்றப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.