தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:44 am

DIN

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் திருநெல்வேலி மக்கள் தொடா்பு அலுவலகம், நேரு இளையோா் மன்றம், தூய சவேரியாா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய இப்பேரணிக்கு, தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் மரியதாஸ் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வ.உ.சி. மைதானத்தில் புறப்பட்ட பேரணி பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேட்டுத்திடல் சாலை வழியாக தூய சவேரியாா் கல்லூரி வளாகத்தை அடைந்தது. பேரணியில் கள விளம்பர அலுவலா் ஜூனி ஜேக்கப், உதவி அலுவலா் வலேல்முருகன், மாவட்ட இளையோா் மன்ற அலுவலா் ஞானச்சந்திரன், டேவிட் அப்பாதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.