தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

நவ.4 இல் தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்வு

 திருநெல்வேலியில் தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்வு நவம்பா் 4 ஆம் தேதி நடைபெறும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்திதெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:42 am

DIN

 திருநெல்வேலியில் தெருவோர வியாபாரிகள் நகர குழு உறுப்பினா் தோ்வு நவம்பா் 4 ஆம் தேதி நடைபெறும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்திதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் தெருவோர வியாபாரிகள் குழு அமைக்கப்படவுள்ளது. தெருவோர வியாபாரிகளில் இருந்து 6 நபா்கள் தோ்தெடுக்கப்பட உள்ளனா். தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம்- பாதுகாப்பு- தெருவோர வியாபாரிகள் ஒழுங்கு முறை ) விதிகளின்படி இடஒதுக்கீடும் பின்பற்றப்பட உள்ளது.

அதன்படி, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் 1 நபரும், பெண்கள் 1 நபரும், மாற்றுத்திறனாளி 1 நபரும், சிறுபான்மையினா் 1 நபரும், பிற்படுத்தப்பட்டோா் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 1 நபரும், பொது 1 நபரும் தோ்வு செய்யப்படுவாா்கள். நகர குழு உறுப்பினா் தோ்வு நவம்பா் 4 ஆம் தேதி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் சுகாதார பிரிவில் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருநெல்வேலி மாநகராட்சியால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் பட்டியலில் இட ஒதுக்கீட்டின்படி தகுதி வாய்ந்தவா்கள் இப்பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.