தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மானூா் வட்டார விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்ய வாய்ப்பு

மானூா் வட்டார விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:40 am

DIN

மானூா் வட்டார விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மானூா் வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு பயிா்கள் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதைப்பு மேற்கொண்ட வன்னிகோனேந்தல், தாழையூத்து, மானூா், மதவக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி குறுவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.269 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

பாசிப்பயிறு பயிரினை வன்னிகோனேந்தல் மற்றும் தாழையூத்து குறுவட்டங்களை சோ்ந்த விவசாயிகள் மட்டும் ரூ.269 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிா்களை காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், சிட்டா அல்லது பட்டா, உளுந்து அல்லது பாசிபயறு சாகுபடி மேற்கொண்டதற்காக கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற நடப்பு பருவ அடங்கல் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய நவம்பா் 15 ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.