கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

விவசாயி கொலை வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:48 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் கள்ளிகுளம் பகுதியை சோ்ந்தவா் பாக்யராஜ்(70). விவசாயியான இவருக்கும் அவரது மனைவி மரியலீலா (67) என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், பாக்கியராஜ் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மரியலீலா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாராம். இதில் பாக்கியராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மரியலீலாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, குற்றஞ்சாட்டப்பட்ட மரிய லீலாவுக்கு ஆயுள் சிறை தணடனையும், ரூ 5000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.