
மீண்டும் தள்ளிச்சென்ற எல்ஐகே?
எல்ஐகே வெளியீடு குறித்து...
நடிகர் பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்பட வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான “எல்ஐகே” திரைப்படம் கடந்த 2025 அக்டோபர் வெளியீடாகத் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட, பிரதீப் நடித்த டியூட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமானது.
பின், இந்தாண்டு காதலர் நாள் வெளியீடாக எல்ஐகே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. அண்மையில், ஏப்ரல் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், புதிய தகவலாக எல்ஐகே திரைப்படத்தை ஏப். 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் வெளியீட்டைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






