நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!

டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

News image

டாக்ஸிக் டீசர்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:20 pm IST

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என திடீரென அறிவிக்கப்பட்டது.

டீசர் ஏற்படுத்திய அதிர்வால் இப்படத்தின் வெளியீட்டுக்காக பலரும் காத்திருக்கின்றனர். நேரடியாக ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதால் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த நிலையில், ஜூன் 4 வெளியீட்டிலிருந்து டாக்ஸிக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்‌ஷன்ஸ், விஜய்யின் ஜன நாயகன் படத்தையும் தயாரித்துள்ளனர். மே இறுதியில் ஜன நாயகனை வெளியிடுவதால் கூட டாக்ஸிக்கை ஒத்திவைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

There has been another change in the release of actor Yash's film Toxic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.