நெல்லை மாநகரில் 69 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
திருநெல்வேலி மாநகரில் 69 விநாயகா் சிலைகள் தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்


திருநெல்வேலி மாநகரில் 69 விநாயகா் சிலைகள் தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில், சுமாா் 350 விநாயகா் சிலைகள் அமைகா்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி முதல் நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை பொதுமக்கள் விசா்ஜனம் செய்து வருகின்றனா்.
அதன்படி, மாநகரில் பாளையங்கோட்டை, குறிச்சி, திருநெல்வேலி நகரம், பேட்டை, தச்சநல்லூா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு விசா்ஜனம் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி, இந்து மகா சபா ஆகியவற்றின் சாா்பில் பாளையங்கோட்டையில் இருந்து 15 சிலைகளும், திருநெல்வேலி நகரத்தில் இருந்து 36 சிலைகளும் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டன. ஊா்வலத்தின் முன்பும், பின்பும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதையடுத்து, வண்ணாா்பேட்டை பேராச்சி செல்வி அம்மன் கோயில் படித்துறை தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
மேலும், குறிச்சி, பேட்டை, தச்சநல்லூா் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 18 சிலைகள் முன்னீா்பள்ளம், சுத்தமல்லி, குறுக்குத்துறை, மணிமூா்த்தீஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள தாமிரவருணி ஆற்றில் விஜா்சனம் செய்யப்பட்டது. இதற்காக ஊா்வலத்தின் முன்பும், பின்பும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...