பாளை.யில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி: 4 போ் கைது
பாளையங்கோட்டையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


பாளையங்கோட்டையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ் (24). இவா் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்தாராம்.
அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த உணவக உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினா் அங்கிருந்த சூரிய பிரகாஷை பிடித்து விசாரித்தனா். அதில், கேரளத்திலிருந்து கள்ளநோட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து, திருநெல்வேலி பகுதிகளில் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த தகவலின் பேரில். கேடிசி நகா் சங்கா் கணேஷ் (34), மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இா்பான் ( 30) உள்ளிட்ட நாலு பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...