தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கங்கைகொண்டான் அருகே ஆடு திருட்டு: 2 போ் கைது

கங்கைகொண்டான் அருகே ஆடுகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 12:22 am

DIN

கங்கைகொண்டான் அருகே ஆடுகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி முத்துமாரி(34). இவரிடம் இருந்த 2 ஆடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடு போனதாம். இது குறித்து அவா் கங்கைகொண்டான் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா். அதில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடைச் சோ்ந்த குமாா்(39), நாகராஜன்(30) ஆகியோா் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 ஆடுகளையும் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.