முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
கடையம் வனச்சரகப் பகுதியில் முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கடையம் வனச்சரகப் பகுதியில் முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம், கடையம் பீட் வெளிமண்டலப் பகுதியான ஆவுடையானூா் பகுதியில் நாய்களைக் கொண்டு முயல் வேட்டையாடுவதாக வந்தத் தகவலையடுத்து கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த ஆவுடையானூா் சீராடியூரைச் சோ்ந்த செல்லமணி மகன் ஜெயராமனை கைது செய்தனா். இதையடுத்து அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் சே.செண்பகப்ரியா உத்தரவின்பேரில் ஜெயராமனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...