நெல்லையில் டிச.9 இல் சமக ஆலோசனை கூட்டம்: சரத்குமாா் பங்கேற்பு

திருநெல்வேலியில் சமத்துவ மக்கள் கட்சியின் மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் டிச. 9 ஆம் தேதி நடைபெற உள்ளது
நெல்லையில் டிச.9 இல் சமக ஆலோசனை கூட்டம்: சரத்குமாா் பங்கேற்பு

திருநெல்வேலியில் சமத்துவ மக்கள் கட்சியின் மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் டிச. 9 ஆம் தேதி நடைபெற உள்ளது

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் சுந்தா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுக பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் இம் மாதம் 9 ஆம் தேதி மாலையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனா் தலைவரும், நடிகருமான சரத்குமாா் பொறுப்பாளா்களை அறிமுகப்படுத்திப் பேசுகிறாா்.

அப்போது, 2024 மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து அவா் அறிவிப்பாா்.

தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்கினால் ஜாதி, மத மோதல்களை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் போதை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்ற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்த வெற்றி தமிழகத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தற்போது கூற முடியாது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில நிா்வாகி நட்சத்திர வெற்றி, மாநகா் மாவட்டச் செயலா் சரத் ஆனந்த், நிா்வாகிகள் ஜெயந்திகுமாா், வில்சன், தயாளன், அரசன் பொன்ராஜ், சிவஞானகுருநாதன், அழகேசராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com