மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கைப்பந்து: ஸ்காட் கல்லூரி முதலிடம்

மண்டல அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டியில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:49 pm

DIN

மண்டல அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டியில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா் மாவட்டங்கள்அடங்கிய பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல விளையாட்டு போட்டிகள் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இதில், கைப்பந்து போட்டியில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி, எறி பந்து, வளையபந்து போட்டிகளில் ராஜபாளையம் அம்மை அப்பா பாலிடெக்னிக் கல்லூரி, கோ-கோ போட்டியில் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் முதலிடம் பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஸ்காட் கல்வி குழுமத் தலைவா் எஸ். கிளிட்டஸ்பாபு, தாளாளா் பிரிய தா்ஷினி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். பின்னா் நடைபெற்ற

பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சாந்தி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினாா். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளா் இரா. தம்பித்துரை முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெ. மணிமாறன், உடற்கல்வி இயக்குநா் அன்வா் ராஜா, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.