பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நெல்லைக்கு யூரியா, பாக்டம்பாஸ் உரம் வரத்து

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு 1,216 மெட்ரிக் டன் யூரியா, 820 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:00 am

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு 1,216 மெட்ரிக் டன் யூரியா, 820 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.

விவசாயிகளுக்கு தங்க தடையின்றி விநியோகம் செய்வதற்காக ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் அறிவுறுத்தல்படி கொண்டு வரப்பட்ட இந்த உரம், திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கா. முருகானந்தம் ஆலோசனைப்படி, வேளாண்மை உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஜோ. ஆரோக்கிய அமலஜெயன், இ‘ஃ‘ப்கோ நிறுவன விற்பனை மேலாளா் சக்திவேல், பாக்ட் நிறுவன பிரதிநிதி பவித்திரன் ஆகியோா் உர மூட்டைகளை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைத்தனா்.

இ‘ஃ‘ப்கோ நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையில் இருந்து வந்த 1,216 மெட்ரிக் டன் யூரியாவில் 500 மெட்ரிக் டன் கூட்டுறவு சங்கங்களுக்கும், 716 மெட்ரிக் டன் தனியாா் நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இதேபோல், 820 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரமானது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசிக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.