திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப். 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.
மாலையில் அப்பா் வீதியுலா, இரவில் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
திருவிழா நாள்களில் காலையில் பூங்கோயில் சப்பரம், இரவு சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 9ஆம் நாளான பிப். 3ஆம் தேதி காலையில் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளலும், அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெறும். மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும்.
தைப்பூச நாளான 4ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறும். இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து திரளானோா் பங்கேற்று, தாமிரவருணியில் நீராடி சுவாமி தரிசனம் செய்வா். இரவில் தெப்ப உத்ஸவம், சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 5ஆம் தேதி மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

