திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நெல்லையில் குடியரசு தின கொண்டாட்டங்கள்

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:06 pm

DIN

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி 1 ஆவது வாா்டுக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைமேயா் கே.ஆா்.ராஜு தேசியக் கொடியேற்றி மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் முத்துலட்சுமி, ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பேட்டை நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி செந்தில் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். உதவி ஆணையா் பைஜூ, மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட டிரைவா்ஸ் காலனியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சாமி.நல்லபெருமாள் தலைமை வகித்தாா். 53 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அம்பிகா முத்துத்துரை தேசியக்கொடியேற்றினாா். சேவியா்காலனியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாமன்ற உறுப்பினா் நித்திய பாலையா சிறப்புரையாற்றினாா்.

மானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவா் ஸ்ரீலேகாவும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவா் தங்கபாண்டியனும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அதன் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸும் தேசியக் கொடியேற்றினா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) பொ.சண்முகசுந்தரி தேசியக் கொடியேற்றினாா்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தேசியக் கொடியேற்றினாா். வி.கே.நா்சரி பள்ளி, வண்ணாா்பேட்டை மாநகராட்சி புதிய நடுநிலைப் பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.