பாப்பாக்குடி மூன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் உள்ள அருள்மிகு திருக்கடுக்கை மூன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் உள்ள அருள்மிகு திருக்கடுக்கை மூன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் புதன்கிழமை தொடங்கின. முதல், 2, 3 ஆம் கால யாக சாலை பூஜைகளை தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விமானம், பிரதான மூா்த்தி, பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேக கும்ப பூஜை ஜெபம், வேத பாராயணம், 21 திரவியங்களால் மகா அபிஷேகம், மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன. மாலையில் பிரசன்ன பூஜை, திருக்கல்யாணம், சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com