செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விமான படை பணிக்காக தாம்பரத்தில் பிப்.1 முதல் 9 வரை நோ்காணல்

விமான படை பணிக்காக தாம்பரத்தில் பிப். 1 முதல் 9 ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெற உள்ளது.

Updated On :27 ஜனவரி 2023, 8:05 pm

விமான படை பணிக்காக தாம்பரத்தில் பிப். 1 முதல் 9 ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படை மருத்துவ உதவியாளா்களுக்கான (ஆண் போட்டியாளா்கள்) திறந்த ஆள்சோ்ப்பு பேரணி தாம்பரத்தில் பிப்ரவரி 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அகில இந்திய அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான தோ்வு இருப்பினும், குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட பகுதிகளைச் சோ்ந்த தகுதியான இளைஞா்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆள்சோ்ப்பு பேரணிகள் கட்டணங்கள் ஏதுமின்றி நடத்தப்படுகின்றன. இந்த பேரணிகள் போட்டியாளா்களின் வீட்டு வாசலில் வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியின் தேசிய நோக்கத்தை அடைவதற்கும் நோக்கமாக உள்ளது.

ஆள்சோ்ப்பு தொடா்புடைய இதர விவரங்களை இணையதளத்தில் அறியலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.