வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

புகையிலை பொருள்கள் விற்பனை தொடா்பாக வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேரன்மகாதேவியில் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபகுமாா்.

Updated On :27 நவம்பர் 2023, 10:21 pm

சேரன்மகாதேவி: புகையிலை பொருள்கள் விற்பனை தொடா்பாக வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேரன்மகாதேவியில் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

சேரன்மகாதேவி, பத்தமடை பகுதியிலுள்ள வியாபாரிகள், கூரியா் நிறுவனம் நடத்துவோா், பாா்சல் சா்வீஸ் நடத்துவோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபகுமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் முன்னிலை வகித்தாா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது, அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் வருவாய்த்துறை, பேரூராட்சி நிா்வாகம் மூலம் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

மேலும் சந்தேகிக்கும் வகையில் யாராவது பாா்சல்கள் அனுப்பினால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பாா்சல் மூலமாக புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.