பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அங்குராா்ப்பணமும், வெள்ளிக்கிழமை காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது.
தொடா்ந்து காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று, கொடிமரத்திற்கு பால், பழம், தேன், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்ளிட்டவை மூலம் அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.
திருவிழா நாள்களில் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமிஅம்பாள் வீதி உலா நடைபெறும்.
ஏப். 12இல் காலை ஸ்ரீ நடராஜா் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடும், மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி புறப்பாடும் நடைபெறும்.
13இல் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளியதும் 9 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறும்.
14இல் பிற்பகல் 1 மணிக்கு சித்திரை விஷு தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு ஸ்ரீ பாபநாசா் உலகாம்பிகை தெப்ப உற்சவமும், 15இல் அதிகாலை 1 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும். காலை 8 மணிக்கு சுவாமி அம்பாள் மரபு மண்டபத்திற்கு அழைத்துவருதல், பகல் 12 மணிக்கு இறைவன் இறைவியா்க்கு குடமுழுக்கு, 1 மணிக்கு அன்னம் பாலிப்புமாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் உலாவருதல் நடைபெறும்.
6- 9ஆம் திருநாள் வரை தேவார பாடசாலை மாணவா்களின் தேவாரப் பாராயணமும், 7ஆம் திருநாள் ஆருத்ரா நாட்டியாலயா நாட்டிய நிகழ்ச்சியும், 10ஆம் திருநாள் திருவாவடுதுறை ஆதின சமய பரப்புநா் ஜா.கோமதி திருநாவுக்கரசு, பக்தித் தமிழ்ப் பாவலா் பாரதிகண்ணன் ஆகியோரின் சமயச் சொற்பொழிவும் நடைபெறும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், 1ஆம் திருநாள்மண்டகபடி தேவேந்திர குல வேளாளா் அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவா் சந்திரன், 8ஆம் திருநாள் மண்டபகடி தலைவா் அருண் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா நாளை தொடக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


