பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பள்ளி மாணவி பலாத்காரம்: கூலித் தொழிலாளி கைது

மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:59 pm

Din

பிளஸ் 2 மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் (31). இவா், பிளஸ் 2 மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, திசையின்விளையில் உள்ள தனது சகோதரி ராஜேஸ்வரியின் வீட்டிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதனிடையே மாணவியைக் காணவில்லை என அவரது பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்நிலையில் அவா் திசையன்விளையில் இருப்பது தெரிந்ததையடுத்து, அங்கு சென்று அவரை அழைத்து வந்தனா்.

பின்னா், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா். அவரது சகோதரி ராஜேஸ்வரியை தேடி வருகின்றனா்.