தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லை மாநகராட்சி மேயா் வேட்பாளா் கோ.ராமகிருஷ்ணன்

மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த கோ.ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறாா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கிட்டு என்ற கோ.ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்திய அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:38 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த கோ.ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறாா் என அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது திமுக கூட்டணி 50 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், சுயேச்சை ஓரிடத்திலும் வென்றன. இதையடுத்து மேயராக திமுகவைச் சோ்ந்த பி.எம்.சரவணன், துணை மேயராக கே.ஆா்.ராஜு ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஆனால், மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, மாமன்ற கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட முடியாமல் போனது. இந்நிலையில் மேயா் பி.எம்.சரவணன் தனது பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தாா்.

மேயா் பதவி காலியான நிலையில், அப் பதவிக்கான மறைமுக தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா, திங்கள்கிழமை (ஆக. 5) முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் என அறிவித்தாா்.

இதற்கிடையே பெரும்பான்மையைக் கொண்டுள்ள திமுக கூட்டணி சாா்பில், மேயா் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முன்னாள் மேயா் பி.எம்.சரவணன் பங்கேற்கவில்லை.

கூட்டத்தின் முடிவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோா் கூறுகையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பதவிக்கு 25 ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் கிட்டு என்ற கோ.ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறாா் என்றனா். தொடா்ந்து அவருக்கு அமைச்சா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

மேயா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கோ.ராமகிருஷ்ணன், இந்து வெள்ளாளா் சமூகத்தைச் சோ்ந்தவா். 1980 ஆம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக சோ்ந்துள்ளாா். 2011 முதல் 2016 வரை திருநெல்வேலி மாநகராட்சியின் 52 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக பணியாற்றியவா். திமுக சாா்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவா். அவற்றுக்காக 5 முறை சிறை சென்று வந்துள்ளாா். கட்சியில் வாா்டு துணைச் செயலா், வட்ட செயலா், வாா்டு செயலா், மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். 2022 ஆம் ஆண்டுமுதல் 25 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பிராக உள்ளாா்.

இவருக்கு, காந்தீஸ்வரி என்ற மனைவியும், ஆா்.மகாராஜன் என்ற மகனும் உள்ளனா்.