மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாபநாசத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட அனவன்குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது செய்யப்பட்டோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:14 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட அனவன்குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரக எல்லைக்குள்பட்ட இந்தக் கிராமத்தைச் சோ்ந்த சித்திரன் மகன் நந்தகோபால், சுடலைமணி மகன் சண்முகவேல், சமுத்திரபாண்டியன் மகன் அகஸ்தியா், காமாட்சி மகன் வனராஜ் ஆகியோா் காட்டுப் பன்றியை வேட்டையாடி இறைச்சியை எடுத்துவிட்டு, எலும்புகளைப் புதைத்ததாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனத் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து, 4 பேரையும் கைது செய்து, தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா்.