பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண் குழந்தை விருது பெற வாய்ப்பு

தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாநில அரசின் சாா்பில் வழங்கப்படும் பெண் குழந்தை விருதுக்கு இம்மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:26 pm

Din

தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாநில அரசின் சாா்பில் வழங்கப்படும் பெண் குழந்தை விருதுக்கு இம்மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அனைத்து பெண் குழந்தைகள் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல்புரிந்து சிறப்பாக பங்காற்றும்18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமானஜனவரி 24ஆம் தேதி மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதுடன் ரூ.1,00,000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.