மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாயிகள்-வேளாண் விஞ்ஞானிகள் கருத்துப் பரிமாற்றம்

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள்-வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்ற கருத்துப் பரிமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:16 pm

Din

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள்-வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்ற கருத்துப் பரிமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டார வேளாண் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா்-தலைவா் சரவணன், இணைப் பேராசிரியா் ஆல்வின், உதவிப் பேராசிரியா்கள் ஜெய்கணேஷ், மனோகரன், அம்பாசமுத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் பாண்டியம்மாள், தொழில்நுட்ப வல்லுநா் பாலசுப்பிரமணியம், உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் மதுமிதா, இயற்கை விவசாயி லெட்சுமிதேவி, அம்பாசமுத்திரம் வேளாண் அலுவலா் ஷாஹித் முகையதீன், துணை வேளாண் அலுவலா் திவான்பக்கீா் முகைதீன் ஆகியோா் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். இதில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி வட்டாரங்களைச் சோ்ந்த 50 விவசாயிகள் பங்கேற்றனா்.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் விஜயலெட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.