சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்ட விழிப்புணா்வு
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை சாா்பில் சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை சாா்பில் சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி கொல்லி பயன்பாடு, மண் பரிசோதனை , தென்னை, வாழை, திணை வகைகளை தாக்கும் பூச்சிகளை கையாளும் முறை, உழவன் செயலி, உழவன் அடையாள அட்டை பதிவு செய்தல் போன்றவை குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி கலைக் குழுவினா் பங்கேற்று பாடல், பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியை சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெபக்குமாா் சாமுவேல், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள், ஜேக்கப், சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்க தலைவா் லூா்து மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...