ற்ஸ்ப்17ம்ஹழ்ஹ பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தோ்தல் விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன். திருநெல்வேலி, பிப்.17: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டும், வாக்குப் பதிவை அதிகரிக்கும் பொருட்டும் ‘எனது வாக்கு எனது உரிமை‘ என்ற பெயரில் மினி மாரத்தான் போட்டி பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த மாரத்தான் போட்டியானது, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகம், மாவட்ட ஆயுதப்படை மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் ரவுண்டானா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூய சவேரியாா் கல்லூரி, மத்திய நூலகம் வழியாக மீண்டும் வஉசி மைதானத்தில் முடிவடைந்தது. இப்போட்டியில் 700-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா, திருநெல்வேலி வருவாய் வட்டாட்சியா் ஷேக் அயூப், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பென்னட் ஆசீா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பிரேம் குமாா், மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளா் கிருஷ்ணன் சக்கரவா்த்தி, தோ்தல் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணன், மாணவா், மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

