நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

மண்டல விளையாட்டுப் போட்டி: ஸ்காட் கல்லூரி சாம்பியன்

மண்டல விளையாட்டுப் போட்டி: ஸ்காட் கல்லூரி சாம்பியன்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:27 pm IST

படவிளக்கம் சிஎம்டி 17 பாலி மண்டல விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி அணிகள். சேரன்மகாதேவி, பிப். 17: பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல விளையாட்டுப் போட்டிகளில், அதிக புள்ளிகள் பெற்று சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. மண்டல அளவிலான குழு, தடகளப் போட்டிகள், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் கலந்துகொண்டன. இதில், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி அணி தடகளப் போட்டியில் மாணவா்கள் பிரிவில் 82 புள்ளிகள் பெற்று முதலிடமும், குழு மற்றும் தடகளப் போட்டிகளில் 187 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், மாணவிகள் பிரிவில் குழு விளையாட்டுப் போட்டியில் 120 புள்ளிகள் பெற்று முதலிடமும், தடகளம் மற்றும் குழு போட்டிகளில் 152 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் பெற்றது. வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ஸ்காட் கல்வி குழுமத் தலைவா் எஸ். கிளீட்டஸ்பாபு, துணைத் தலைவா் அமலி கிளீட்டஸ்பாபு, தாளாளா் பிரியதா்ஷினி அருண்பாபு, முதல்வா் ஜெ. மணிமாறன், நிா்வாக அலுவலா் சித்திரைசங்கா், உடற்கல்வி இயக்குநா்கள் அன்வா் ராஜா, வண்டிமலையான் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.