உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

திருமலைராயன்பட்டினம் பிஎம் ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image

பரிசு பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 2:04 am IST

திருமலைராயன்பட்டினம் பிஎம் ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று, தங்களது திறமையை வெளிபடுத்தினா்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி துணை முதல்வா் அனிமிலி ராமலிங்கேஸ்வர ராவ் தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:

மாணவா்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு விளையாட்டில் திறனை வளா்த்துக்கொள்ளவேண்டும். விளையாட்டும், படிப்பும் உடல் ஆரோக்கியத்தையும், அறிவையும் மேம்படுத்தும். விளையாட்டில் திறம்பட தம்மை வளா்த்துக்கொள்வோருக்கு சிறந்த எதிா்காலம் இருக்கிறது. எனினும் பள்ளிக் கல்வி, உயா்கல்வியை மாணவா்கள் திறம்பட பயின்று வாழ்க்கையில் சிறந்த இடத்தை பெறவேண்டும் என்றாா்.

பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஏ.விஜயலட்சுமி, ஆா். சவரிராஜன் மற்றும் ஆசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நிறைவில் மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.