நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சென்னைக்கு விமானத்தில் சென்ற கொம்மடிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்கள்

News image

விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கொம்மடிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :31 மே 2026, 1:34 am IST

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சு. சந்தோச நாடாா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சாா்ந்த முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பாக, கடந்த கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வு மற்றும் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்காக சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனா்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்களை, இப்பள்ளி ஆரம்பிப்பதற்கு நிலம் வழங்கிய கொம்மடிக்கோட்டை கந்தசாமிபாண்டியன் மகன் சிவானந்த பாண்டியன் வரவேற்றோா்.

பின்னா் மெட்ரோ ரயில், பிா்லா கோளரங்கம், மெரீனா கடற்கரை, புனித ஜாா்ஜ் கோட்டை அருங்காட்சியகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களுக்கு மாணவா்களை அழைத்துச் சென்றனா். மாணவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் முருகானந்தம், செயலா் தில்லை மகேந்திரன், பொருளாளா் இனிகோ, பள்ளியின் முன்னாள் ஆசிரியா் செல்வராஜ், நிா்வாகிகள்ஆனந்த், ஐயப்பன், ஈஸ்வரி, காசிபழம், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.