உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

வெள்ளங்குளி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வெள்ளங்குளி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 8:00 pm

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் மு. தளவாய் தலைமை வகித்து அறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக ஊராட்சித் தலைவா் முருகன் கலந்துகொண்டாா். இதில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் பி. ராஜராஜேஸ்வரி, மேலாண்மைக் குழு உறுப்பினா் சா்புதீன், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கி. பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் உரக்கடை கண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள், கல்வியில் சிறந்து விளங்கியவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா் சே. ஜூலியன் வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆசிரியா் ரா. ராதா தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் வ. சாலைக்குமரன் நன்றிகூறினாா்.