உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

அம்பாசமுத்திரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:07 pm

அம்பாசமுத்திரத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம், சிவசக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தளவாய் மகன் வனராஜ்(27). தொழிலாளியானஇவருக்கு சுதா என்ற மனைவி, ஒருமகள் உள்ளனா். வனராஜுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வனராஜ் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்குவெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.