திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியின் 13 ஆவது விளையாட்டு விழா, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் திருமாறன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் சண்முகராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா் உமாநாத் விளையாட்டு அறிக்கையை வாசித்தாா். விளையட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளா் கேப்டன் பிரேம்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒலிம்பிக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். பெல் பின்ஸ் மருத்துவமனை மருத்துவா் ப்லெஸி டிவியன் பேசினாா். தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் வைசியா வங்கி சாா்பில் வழங்கப்பட்ட பரிசுகளை மேலாளா் மகேஷ் வழங்கினாா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீச்சல் பயிற்றுநா் கா்ணன், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா். பட விளக்கம் ற்ஸ்ப்24ள்ஸ்ரீட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய பள்ளி தாளாளா் திருமாறன்.
தொடர்புடையது

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

பள்ளியில் ஆண்டு விழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

