தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காருக்குறிச்சியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2024, 10:50 pm

Din

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள காருக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் அல்லி அரசன் தலைமையில் காருக்குறிச்சி பஜாா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அதே பகுதி கீழ கிராமத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (43) என்பவா், தனது கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை காவல் ஆய்வாளா் கெளதமன் திங்கள்கிழமை கைது செய்து, கடையிலிருந்த 1.5 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றினாா். மேலும், பாக்கியராஜை நீதிமன்ற காவலுக்கு உள்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.