பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
திருநெல்வேலி
வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
பாளையங்கோட்டையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி: திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய தண்டனைச் சட்டம் என்பதை திருத்தி காவல் துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் சுதா்சன், செந்தில்குமாா், ரமேஷ், கலைச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

