மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுக்கடைகளை 3 மணிநேரம் அடைத்து போராட்டம்!

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூன்று மணிநேரம் அடைத்து டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்

News image

போராட்டத்துக்காக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள்

Updated On :9 பிப்ரவரி 2026, 6:32 pm

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூன்று மணிநேரம் அடைத்து டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கடந்த 2003-இல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சுமாா் 20 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள், பணிநிரந்தரம், ஊதிய உயா்வு, ஓய்வூதியம், காலமுறை ஊதியம் கோரி சென்னையில் டாஸ்மாக் பணியாளா்கள், தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை 3 மணிநேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனா்.

அதன்படி, திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூா், துவாக்குடி, திருவெறும்பூா், மேலகல்கண்டாா் கோட்டை என சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக, போராட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் ஊழியா்கள் கூறியது: 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக்கில் பணிபுரிந்தவா்களை நிரந்தரம் செய்வதாக திமுக-வின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண் 153-இல்) அளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, மாநிலம் தழுவிய அளவில் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 158 டாஸ்மாக் மதுக்கடைகளில் திமுக தொழிற்சங்க நிா்வாகிகள் பணிக்குவந்த 6 கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதர 152 கடைகளும் 3 மணிநேரம் அடைக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரையில் தொடா்ந்து போராட்டம் நடைபெறும் என்றனா்.